EasyShare தனியுரிமை விதிமுறைகள்

கடைசியாகப் புதுப்பித்தது: 25 மார்ச் 2023

%3$s (இனிமேல் "நாங்கள்" அல்லது "எங்கள்" என்று குறிப்பிடப்படும்) என்பது EasyShare சேவையை ("சேவை") வழங்கும் நிறுவனமாகும், சேவை தொடர்பாக செயலாக்கப்பட்ட தனிப்பட்ட தரவுக்குப் பொறுப்பேற்கும் நிறுவனமும் இதுவே. உங்கள் தனியுரிமையைக் குறித்து நாங்கள் அக்கறை கொள்கிறோம், அதனால் உங்கள் தனிப்பட்ட தரவை எதற்காக, எவ்வாறு செயலாக்குகிறோம் என்று நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறோம். EasyShare தனியுரிமை விதிமுறைகளில் ("விதிமுறைகள்") பின்வருபவை உள்ளடங்கும்:

1.     சேகரித்தல் மற்றும் செயலாக்குதல்: நாங்கள் என்ன தரவை சேகரிப்போம், அதை எப்படிப் பயன்படுத்துவோம் என்பது பற்றியது;

2.     சேமித்தல்: உங்கள் தரவை எவ்வாறு சேமிப்போம் என்பது பற்றியது;

3.     பகிர்தலும் இடமாற்றுதலும்: உங்கள் தரவை நாங்கள் எப்படிப் பகிர்வோம் அல்லது இடமாற்றுவோம் என்பது பற்றியது;

4.     உங்கள் உரிமைகள்: உங்கள் தரவைச் செயலாக்குவது தொடர்பாக உங்களுக்குள்ள உரிமைகளும் விருப்பங்களும்;

5.     எங்களைத் தொடர்புகொள்க: மேலும் கேள்விகள் இருந்தால் எங்களை எப்படித் தொடர்புகொள்ளலாம் என்பதற்கான விவரங்கள்.

இந்த விதிமுறைகளை கவனமாகப் படித்து, நீங்கள் ஒப்புதலளித்து சேவையைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான எங்கள் நடைமுறைகளைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். சேவைக்காக உங்கள் தரவை நாங்கள் செயலாக்க நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் இவற்றை மனதில் கொள்ளவும்: இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லது உங்கள் ஒப்புதலைத் திரும்பப்பெற்றால், நீங்கள் சேவையைப் பயன்படுத்த முடியாது.

1.  சேகரித்தல் மற்றும் செயலாக்குதல்

தரவு மற்றும் நோக்கங்கள்

•   ஒரே தொடுதலில் சாதனத்தை மாற்றுதல் மற்றும் காப்புப் பிரதி மீட்டமைப்பின் அடிப்படை செயல்பாடுகளுக்காக, உங்கள் SMS, தொடர்புகள், நாள்காட்டி, படங்கள், வீடியோ, ஆடியோ, இசை, பயன்பாடுகள், அமைப்புகள், அழைப்புப் பதிவுகள், குறிப்புகள், சாதனத்தில் சேமிக்கப்பட்ட கோப்புகள் அல்லது பிற உள்ளடக்கங்கள் (ஒட்டுமொத்தமாக, "உள்ளடக்கங்கள்") ஆகியவற்றை உங்கள் சாதனத்தில் உள்ள அல்காரிதத்தைப் பயன்படுத்தி EasyShare செயலாக்கும். அத்தகைய தனிப்பட்ட தரவு உங்கள் சாதனத்திற்குள் மட்டுமே செயலாக்கப்படும், அவற்றை நாங்கள் சேகரிக்கவோ, அணுகவோ, எங்கள் சேவையகங்களில் பதிவேற்றவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

•   மொபைல் ஃபோன் கணக்கு செயல்பாடு இருக்கும் நாடுகளில்/பிராந்தியங்களில், நீங்கள் சாதனத்தில் உள்நுழைந்திருந்தால், கணக்குத் தகவலைக் காண்பிக்கும் நோக்கத்திற்காக உங்கள் மொபைல் ஃபோன் கணக்குத் தகவலை EasyShare செயலாக்கும்.

•   EasyShare பயனர் அனுபவ மேம்பாட்டுத் திட்டம்: EasyShare பயனர் அனுபவ மேம்பாட்டுத் திட்டத்தில் தானாக முன்வந்து பங்கேற்க நீங்கள் தேர்வு செய்யலாம். ங்கள் பங்கேற்க தேர்வுசெய்தால், எங்கள் சேவையை மேம்படுத்தும் பொருட்டு உங்கள் சாதனத்தின் அடையாளங்காட்டி அல்லது பயன்பாட்டு அடையாளங்காட்டி, சாதன மாடல், சாதன பிராண்டு, Android சிஸ்டம் பதிப்பு, பயன்பாட்டின் பதிப்பு, பயன்பாட்டின் உபயோக நடத்தை (எ.கா. உலாவல், கிளிக் செய்தல் போன்றவை.), நாட்டின் குறியீடு ஆகியவற்றையும் பயன்பாட்டுச் செயல்பாடு சரியாக வேலை செய்யாதபோது பெறும் பிழைக் குறியீட்டையும் சேகரிப்போம். EasyShare பயன்பாட்டில் உள்ள அமைப்புகள் > EasyShare பயனர் அனுபவ மேம்பாட்டுத் திட்டத்தில் சேரவும் என்பதற்குச் சென்று எந்த நேரத்திலும் பட்டனை ஆஃப் செய்யும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். நீங்கள் பட்டனை ஆஃப் செய்தால், நீங்கள் மீண்டும் ஏற்கும் வரை அத்தகைய செயலாக்கங்களை நாங்கள் நிறுத்திவிடுவோம். சாதன மாடல், சிஸ்டம் பதிப்பு அல்லது பிராந்தியக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, இந்தச் செயல்பாடு சில குறிப்பிட்ட சாதனங்களில் மட்டுமே கிடைக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் இந்தச் செயல்பாட்டை இயக்கினால் அல்லது பயன்படுத்தினால் மட்டுமே இந்தச் செயல் விளக்கத்தின் படி தரவைச் செயலாக்குவோம்.

இந்த விதிமுறைகளுக்கு உங்கள் ஒப்புதலின் பேரில் மேலேயுள்ள நோக்கங்களுக்காக தரவை செயலாக்குவோம். மேலும் பொருந்தக்கூடிய சட்டங்களால் அனுமதிக்கப்படும் போது, எங்கள் தனியுரிமைக் கொள்கையின் பிரிவு 2-இல் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட சில சூழல்களில் வேறு பிற சட்டப்பூர்வ அடிப்படை பொருந்தக்கூடும். சேவையின் அனைத்துச் செயல்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், விதிமுறைகள் பிரிவு 4-இல் விவரிக்கப்பட்டுள்ள முறைகள் மூலம் உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறவும்.

பாதுகாப்பு:

உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்கிறோம். நாங்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம், இதில் மறைகுறியாக்கம் செய்யும் மற்றும் பெயர் அடையாளம் நீக்கும் தொழில்நுட்பங்கள் போன்றவையும் உள்ளடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல, இவை நீங்கள் எங்களுக்கு வழங்கும் எந்தத் தரவையும் தவறாகப் பயன்படுத்துவதையும், அவற்றுக்கு சேதமோ இழப்போ ஏற்படுவதையும் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க ஆகச்சிறந்த பங்களிப்பை நாங்கள் வழங்குவோம். உங்கள் தரவு தொடர்பான ஏதேனும் அங்கீகரிக்கப்படாத உபயோகம், சேதம் அல்லது இழப்பு குறித்து நீங்கள் சந்தேகப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மூலம் உடனடியாக எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

2.  சேமித்தல்

கால அளவு:

மொபைல் ஃபோன் கணக்கு உள்நுழைவு மற்றும் பயனர் அனுபவ மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான தரவானது தரவுச் செயலாக்கத்திற்கு தேவையான காலத்திற்கு மட்டுமே எங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கப்படும். மற்ற தரவுகள், குறிப்பாக நீங்கள் சேவையை இடமாற்றுவதற்கு பயன்படுத்தும் உள்ளடக்கங்கள், உங்கள் சாதனத்திற்குள் மட்டுமே செயலாக்கப்படும், அவற்றை நாங்கள் சேகரிக்கவோ, அணுகவோ, எங்கள் சேவையகங்களில் பதிவேற்றவோ மாட்டோம். இச்சமயத்தில், இவற்றை நாங்கள் தக்கவைத்துக்கொள்வோம்:

•   கடைசியாக நீங்கள் எங்களைத் தொடர்புகொண்டதில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின், டேட்டா சப்ஜெக்ட் உரிமைகளைப் பயன்படுத்துதல், ஒப்புதல்கள் வாடிக்கையாளர் தகவல் பரிமாற்றப் பதிவுகள் தொடர்பான தனிப்பட்ட தரவு;

•   காப்புப் பிரதிகள் மற்றும் பாதுகாப்பு நோக்கத்திற்காகச் செயலாக்கப்பட்ட பயன்பாட்டுப் பதிவுகள் (அவை உருவாக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதங்களுக்கு மிகாமல்).

வைத்திருப்புக் காலம் காலாவதியானதும், உங்கள் தனிப்பட்ட தரவு தேவைப்படாவிட்டால் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி தரவை நீக்குவோம் அல்லது அநாமதேயமாக்குவோம்.

இருப்பிடம்:

பயனரின் நாட்டில்/பிராந்தியத்தில் அவருக்குக் கிடைக்கும் அதே அளவு தரவுப் பாதுகாப்பை அளிப்பதற்கும், பயனர்களின் கோரிக்கைகளுக்கு சிறந்த முறையில் நடவடிக்கை எடுக்கவும், வெவ்வேறு நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள பயனர்களின் தரவைச் சேகரிக்கும் இடமும் வேறுபடும். உங்கள் தனிப்பட்ட தரவு எங்கே சேமிக்கப்படுகிறது என்பதை அறிய எங்கள் தனியுரிமைக் கொள்கையில் சேமிப்பகம் மற்றும் சர்வதேசப் பரிமாற்றம் என்ற பிரிவைப் பார்க்கவும்.

3.  பகிர்தலும் இடமாற்றுதலும்

சேவையகங்களில் தரவைப் பதிவேற்றுவது தொடர்பாக, உங்கள் தரவை நாங்களே செயலாக்குவோம் அல்லது எங்கள் சார்பாக செயல்படும் இணை நிறுவனங்கள், சேவை வழங்குநரைப்(வழங்குநர்களைப்) பயன்படுத்திச் செயலாக்குவோம். மேலும், சட்டப்பூர்வச் செயல்முறை அல்லது தகுந்த ஆணையத்திடமிருந்து பொருந்தக்கூடிய சட்டங்களின்படி வரும் கோரிக்கைக்கு பதில்வினையாற்றத் தேவைப்படும்போது மட்டுமே உங்கள் தரவை நாங்கள் பகிர்வோம்.

சர்வதேச அளவில் நாங்கள் செயல்படுவதால், உலகம் முழுவதும் எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதை சாத்தியமாக்க, உங்கள் தனிப்பட்ட தரவு பிற நாடுகளில்/பிராந்தியங்களில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றப்படலாம் அல்லது தொலைதூரத்திலிருந்து அணுகபடலாம். உங்கள் தரவு எங்கிருந்தாலும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உதவுவதற்காக, நாடுகளுக்கு இடையே தனிப்பட்ட தரவு பரிமாற்றம் தொடர்பான சட்டங்களுக்கு இணங்குகிறோம்.

4.  உங்கள் உரிமைகள்

உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கக் கூடிய தரவு தொடர்பாக உங்களுக்குப் பல்வேறு உரிமைகள் இருக்கின்றன.

ஒப்புதலைத் திரும்பப்பெறுதல்:

உங்கள் தரவை நாங்கள் செயலாக்குவதற்கான ஒப்புதலை நீங்கள் எந்தநேரத்திலும் விலக்கிக் கொள்வதற்குத் தேர்வு செய்யலாம், நீங்கள் சேவையின் சுயவிவரத்தில் தனியுரிமை > தனியுரிமை விதிமுறைகள் என்பதில் உள்ள ஒப்புதலைத் திரும்பப்பெறு பட்டனைத் தட்டி இதைச் செய்யலாம். உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டால், நீங்கள் இந்த விதிமுறைகளை மீண்டும் ஏற்கும் வரை, தரவைச் செயலாக்குவதை நாங்கள் நிறுத்தி விடுவோம்.

பிற உரிமைகள்:

உங்கள் பிற உரிமைகளை (பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைப் பொறுத்து, மாற்றம் செய்தல், அழித்தல், செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துதல், ஆட்சேபம் தெரிவித்தல் அல்லது தரவு நகர்த்துத் தன்மை போன்றவை) பயன்படுத்த, கீழே உள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தவும்.

புகார்:

மேற்பார்வை அதிகாரியிடம் புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உண்டு.

5.  எங்களைத் தொடர்புகொள்ளவும்

இந்த விதிமுறைகளைப் பற்றி அல்லது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவது பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் ஏதேனும் சிக்கலைப் பற்றி புகாரளிக்க விரும்பினால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்ள விரும்பினால், அல்லது தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களின் கீழ் உங்கள் உரிமைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், இங்கு தட்டவும். உங்கள் கோரிக்கைக்கு எந்தவொரு தாமதமும் இல்லாமல் பதிலளிக்க நாங்கள் முயற்சி செய்வோம், அத்துடன் பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு சட்டங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் நேர வரம்புகளுக்குள் பதிலளிக்க முயற்சி செய்வோம்.

இந்த விதிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் ஏதேனும் செய்தால் உங்களுக்கு தகுந்த முறையில் தெரிவிப்போம். இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி செயல்படுத்தப்படும், அதில் இருந்து எங்கள் நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவரங்களையும் நீங்கள் காணலாம்.